பிரபாகரனின் தம்பிமார் சிந்திய இரத்தம் வீண் போகாது, தமிழ் ஈழம் மலரும்!

இலங்கையில் தமிழர்கள், பிரபாகரனின் தம்பிமார் சிந்திய இரத்தம் ஒருபோதும் வீண் போகாது. என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் எழுதியுள்ள “திரையுலகின் தவப்புதல்வன்” மற்றும் “இராமாயண ரகசியம்” ஆகிய நூல்களின் அறிமுக விழா சென்னை தி.நகர் சர் பிட்டி. தியாகராயர் அரங்கில் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு இராமாயணம் மற்றும் கம்பராமாயணம் இரண்டையும் ஒப்பிட்டு ஆய்வுரை ஒன்றை வைகோ ஆற்றியுள்ளார். இதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

‘‘இராமாயணத்தில் இராவணன் வீழ்த்தப்பட்டிருக்கலாம். ஆனால், இலங்கையில் தமிழர்கள், பிரபாகரனின் தம்பிமார் சிந்திய இரத்தம் ஒருபோதும் வீண் போகாது. இலங்கையில் தமிழ் ஈழம் மலரும்’’என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழருவி மணியன், நடிகர்கள் சிவகுமார், மயில்சாமி, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here