யாழ். சுன்னாகத்தில் நண்பனுக்காக இளைஞர்கள் செய்த நல்ல காரியம்

ஐயனார் இளைஞர் கழகத்தின் முன்னாள் உறுப்பினரும், துடிப்புள்ள இளைஞருமான மறைந்த ப. கிசோக் ஞாபகார்த்த இரத்ததான முகாம் நேற்று இடம்பெற்றது.

யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவினரின் அனுசரணையில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

நிகழ்வினை யாழ். சுன்னாகம் ஐயனார் இளைஞர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

ஐயனார் இளைஞர் சனசமூக நிலைய மண்டபத்தில், ஐயனார் இளைஞர் கழகத் தலைவர் ரவிச்சந்திரன் காமராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்த இரத்ததான முகாமைச் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.செல்வக்குமார் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், உடுவில் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் எஸ். அனுசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் 28 வரையான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.

இரத்த தானம் வழங்கிய இளைஞர்கள் அனைவருக்கும் பயன்தரு மரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சக நண்பனை நினைவு கூர்ந்து இளைஞர்கள் முன்வந்து இரத்ததானம் வழங்கியுள்ளமையைப் பலரும் பாராட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here