இந்­தி­யாவின் முதல் முழு­நேர பெண் பாது­காப்பு அமைச்­ச­ரானார் நிர்­மலா சீதா­ராமன்

இந்­தி­யாவின் புதிய பாது­காப்பு அமைச்­ச­ராக நிர்­மலா சீதா­ராமன்  பத­வி­யேற்­றுள்ளார். இதன்மூலம் இந்­தி­யாவின் முதல் முழு­நேர பெண் பாது­காப்பு அமைச்சர் என்ற அந்­தஸ்தை அவர் பெற்­றுள்ளார்.

மத்­திய அமைச்­ச­ர­வையில் மிகவும் முக்­கி­ய­மான பத­வி­யான பாது­காப்­புத்­து­றை­யா­னது நிர்­மலா சீதா­ரா­ம­னுக்கு நேற்று வழங்­கப்­பட்­டது. இந்­தி­யாவின் மிகவும் முக்­கி­ய­மான பொறுப்­பா­னது இந்­திரா காந்­திக்கு பின்னர் இரண்­டா­வது முறை­யாக ஒரு பெண்­ணுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. பாது­காப்பு அமைச்­ச­ராக பொறுப்பு வகிக்கும் இரண்­டா­வது பெண் என்ற பெரு­மை­யையும் நிர்­மலா சீதா­ராமன் பெற்­றுள்ளார்.

பிர­தமர் மோடி தலை­மை­யி­லான மத்­திய அமைச்­ச­ரவை நேற்று  விரி­வாக்கம் செய்­யப்­பட்­டது. இதன்­போது 9 பேரை புதி­ய­தாக அமைச்­ச­ர­வைக்கு மத்­திய அரசு இணைத்­துக்­கொண்­டது. பதவி ஏற்­ற­வர்­களில் ஏற்­க­னவே இணை அமைச்­சர்­க­ளாக இருந்த நிர்­மலா சீதா­ராமன் உள்­ளிட்ட 4 பேர் அமைச்­ச­ரவை  அந்­தஸ்­துக்கு உயர்த்­தப்­பட்­டுள்­ளனர்.

அவர்­க­ளுக்­கான இலாக்­காக்­களும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.  நிர்­மலா சீதா­ரா­ம­னுக்கு பாது­காப்­புத்­துறை, பியூஸ் கோய­லுக்கு ரயில்வே, சுரேஷ் பிர­பு­வுக்கு வர்த்­தகம், தர்­மேந்­திர பிரதான் ஏற்­க­னவே வகித்­து­வந்த பெற்­றோ­லியத் துறை­யோடு திறன் மேம்­பாட்­டுத்­து­றை­யையும் கவ­னிக்கும் கூடுதல் பொறுப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

பொன். இரா­தா­கி­ருஷ்­ண­னுக்கு அவர் ஏற்­க­னவே வகித்து வந்த பொறுப்­பு­க­ளோடு நிதித்­துறை (இணை) பொறுப்பும்  வழங்­கப்­பட்­டுள்­ளது.

ஏற்­க­னவே நிதித்­துறை அமைச்­ச­ராக இருந்த அருண் ஜெட்லி அதே பொறுப்பை தொடர்வார் என்றும்   ராஜ்நாத் சிங் (உள்துறை) மற்றும் சுஷ்மா சுவராஜ் (வெளியுறவு) ஏற்கனவே அவர்கள் கவனித்து வந்த துறைகளில் நீடிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here