கடைசி ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி… கோலி சதம்!

இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடியது.

ஒருநாள் தொடரில் 4 – 0 என்று முன்னிலை வகித்து வந்த இந்திய அணி, இன்று கொழும்புவில் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்தது.

முன்னதாக, போட்டிக்கான டாஸை வென்று களமிறங்கிய இலங்கை அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 238 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி, 46.3 ஓவர்கள் முடிவடைந்த போது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் கடந்தது. சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆட்டம் இழக்காமல் 110 ரன்களை எடுத்தார். இது கோலியின் 30-வது  சதமாகும். மேலும், அவர் இந்த ஆண்டின் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை கடுக்கும் முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இந்திய அணி சார்பில், 5 விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஷ்வர் குமாருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இத்தொடரில், 15 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ராவுக்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது.

தோனி 100-வது  ஸ்டம்பிங், இரு நாடுகளுக்கு இடையேயான  போட்டித் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் பூம்ராவின் 15 விக்கெட்டுகள், இலங்கை மண்ணில் அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி என இன்றைய நாள் இந்திய கிரிக்கெட் அணிக்கு சாதனை நாளாகவே அமைந்திருந்தது. தொடரின் கடைசி போட்டியிலாவது வெற்றி பெற்றுவிடுவார்கள் என நம்பி இருந்த இலங்கை அணி 0-5 என தோல்வியை தழுவியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here