தலைமைப் பதவியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

தலைமைப் பதவியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்து ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இலங்கை அணி ஐந்துக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியுள்ளது.

ஐந்தாவது ஒருநாள் போட்டியின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

தலைமைப் பதவியை விட்டு விலக வேண்டிய காரணங்கள் எதுவுமில்லை. புதிய தெரிவுக்குழுவினரே தலைமைப் பதவி பற்றி தீர்மானிப்பார்கள்.

இந்த போட்டித் தொடரில் இலங்கை அணி சிறந்த திறமைகளை வெளிப்படுத்தவில்லை.

போட்டித் தொடரை வெற்றியீட்டவே நாம் முயற்சித்தோம், சில பிழைகள் விட்டிருந்தோம்.

இந்த பிழைகளை திருத்திக் கொண்டு அடுத்த போட்டியில் வெற்றியீட்டவே முயற்சிக்கின்றோம்.

விளையாட்டு வீரர் என்ற ரீதியிலும் அணித் தலைவர் என்ற ரீதியிலும் தற்போதைய அணியின் நிலை குறித்து வருந்துகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here