மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணியில் ஆதரவு-கணேசன் பிரபாகரம் அழைப்பு

மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணியில் ஆதரவு வழங்குமாறு ஜ.போ. கட்சியின் மட்டு அம்பாரை மாவட்ட பிராந்திய அலுவலகத்தின் அமைப்பாளர் கணேசன் பிரபாகரம் அழைப்பு விடுத்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற தரவை துயிலுமில்ல சிரமதானப் பணியின் நிறைவின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதெ அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்………

தரவை மாவீரர் துயிலுமில்லம் மாவடிமும்மாரி மற்றும் வாகரை துயிலும் இல்லங்கள் என மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் கட்டம் கட்டமாக தொடர்ச்சியாக பிரதேச மக்களது ஆதரவுடன் துப்பரவுப் பணிகள் செய்யப்பட்டு வருகின்ற போதும் மனிதர்களினால் செய்யமுடியாத சில வேலைகளும் உள்ளது இருப்பினும் இதுவரை மேற்கொண்ட பணிகளை இடைநிறுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளமையினால் தொடர்ந்தும் மாவீரர் துயிலும் இல்லங்கள் புனரமைக்க உதவிகள் வழங்க கூடியவர்களை தொடர்பு கொள்ளுமாறும் அப்பணிகளில் பிரதேச மக்களையும் பங்கேற்று ஒத்துழைப்பு வழங்குமாறும் அழைப்பு விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here