ஆட்டிறைச்சி விளம்பரத்தில் விநாயகர்!

ஆட்டிறைச்சி உண்பதை ஊக்கப்படுத்தும் விளம்பரத்தில் இந்துகளின் வழிபாட்டு தெய்வமான விநாயகரை இணைத்துக்கொண்டமைக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.

Meat and Livestock Australia என்ற நிறுவனம் You Never Lamb Alone எனும் தொனிப்பொருளில் அமைந்த புதிய வீடியோ விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

அதில், ஏனைய மதத்தினர் வணங்கும் கடவுள் மற்றும் இறைதூதர்களோடு, விநாயகர் போன்ற வேடம் அணிந்த ஒருவரும் இருப்பதை போன்று காண்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விளம்பரமானது இந்து மதத்தினரை அவமதிப்பதாகவும, இந்து மதத்தின் நம்பிக்கையை இழிவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக இந்து அமைப்புகள் பலவும் குற்றம் சுமத்தியுள்ளன.

எவ்வாறாயினும், மத இன வேறுபாடு எதுவுமின்றி அனைவரும் உண்ணக்கூடிய ஒரு உணவு Lamb என்பதை அடையாளப்படுத்தும் நோக்கிலேயே இந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக Meat and Livestock Australia நிறுவனம் கூறியுள்ளது.

அத்துடன், எவரினதும் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் நோக்கில் இந்த விளம்பரம் தயாரிக்கப்படவில்லை என அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளது. எவ்வாறாயினும், இந்த விளம்பரத்திற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here