கனடாவில் வீடொன்றை விழுங்கிய புதை குழி?

நோவ ஸ்கோசியாவில், ஹான்ஸ் கவுன்ரியில் ஞாயிற்றுகிழமை காலை வீடொன்றில் வசித்த குடும்ப அங்கத்தவர்கள் வீடடின் நிலக்கீழ் பகுதியில் இருந்து வந்த சத்தத்தை கேட்டு திருடர் என பயந்து எழுந்தனர்.

பயத்தில் 911-ஐ அழைக்க அங்கு வந்த அதிகாரிகள் ஆபத்தை ஏற்படுத்தியது திருடர்களல்ல புதைகுழி ஒன்றென கண்டறிந்தனர்.

இந்த அபாயம் மனிதரால் ஏற்படுத்தப்பட்டதல்ல இயற்கையினால் உருவாக்கப்பட்டது.

எவரும் பாதிப்படையவில்லை.

குறிப்பிட்ட வீட்டில் கிறிஸ் ஸ்ரிக்கி என்பவர் அவரது மனைவி மற்றும் 13 மற்றும் 16-வயது மகள்களுடன் வசித்தனர். புதைகுழி திறந்த சமயத்தில் 13-வயது மகள் வீட்டில் இல்லை. தாயும் மகளும் திருடன் என நினைத்து ஒதுக்கிடம் ஒன்றிற்குள் பதுங்கியவாறு 911-ஐ அழைத்துள்ளனர்.

தீயணைப்பு பிரிவினர் வருவதற்கு முன்பாக வீடு மோசமாக பாதிப்படைந்து விட்டது.

முதல் மாடி 20-30 அடி புதைகுழிக்குள் சரிந்து விட்டது.

சுற்று சூழல்களிற்கு தீங்கு ஏற்பட முன்னர் தீயணைப்பு பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தண்ணீர் மற்றும் கழிவு நீர் லைன்கள் துண்டிக்கப்பட்டன.

ஆபத்தான பொருட்களை கையாளும் அணியினர் வரவழைக்கப்பட்டு வெளிப்புறத்தில் இருந்த எண்ணெய் தொட்டி வெற்றாக்கப்பட்டது.

தீயணைப்பு அதிகாரிகள் சிலர் வீட்டின் உள்ளே அனுப்பபட்டு குடியிருப்பாளர்களின்அத்தியாவசிய தேவைப்பொருட்கள் சில எடுத்து வரப்பட்டன-பணப்பை, பாஸ்போட் போன்றன-நிலைமை மோசமடைவதற்கு முன்னராக..

இவர்களது வீடு கிட்டத்தட்ட 12-வருடங்களானது.

கிறிஸ் மற்றும் அவரது மனைவி இருவரும் பாடசாலை ஒன்றில் பணிபுரிகின்றனர்.

அவரச சேவை பிரிவினரின் வாகன சத்தங்கள் கேட்டு அயலவர்கள் அனைவரும் எழுந்து விட்டனர்.

புதைகுழிகாரணமாக முழு வீடுமே சரியலாம் என தாங்கள் கவலை கொள்வதாக அவசர சேவையினர் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here