கப்பலில் இருந்து பெருந்தொகை சிகரெட் மீட்பு.

வௌிநாட்டுக் கப்பல் ஒன்றில் இருந்து 133,980 சட்டவிரோத சிகரெட்டுக்களை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இவற்றின் பெறுமதி 6,699,000 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் சீமெந்துகளை நாட்டுக்கு கொண்டு வந்த ஒன்று என சுங்கப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், சம்பந்தப்பட்ட கப்பலின் மாலுமி வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதோடு, அவருக்கு 100,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here