போதைப்பொருள் கடத்தி வந்த பாகிஸ்தான் பிரஜை.

உடம்­பினுள் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து வைத்து நாட்­டுக்குள் கடத்தி வந்த பாகிஸ்தான் பிர­ஜையை எதிர்­வரும் 18 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீர்­கொ­ழும்பு மேல­திக நீதிவான்  ஆர்.ஜி.என்.கே. ரன்­கோன்கே         திங்­கட்­கி­ழமை  உத்­த­ர­விட்டார்.

பாகிஸ்தான் லாஹுரை சேர்ந்த 37 வய­து­டைய மொஹமத் அஸ்லம் என்­ப­வரே விளக்க­ம­றி­யலில் வைக்கப்பட்டுள்ளவராவார்.

சந்­தேக நபர் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரி­வி­னரால் கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வைத்து கைது செய்­யப்­பட்டார். தடுப்புக் காவல் உத்­த­ரவு பெற்று நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் அனுமதிக்கப்பட்ட சந்­தேக நபரின் உடம்­பினுள் மறைத்து வைத்­தி­ருந்த  367 கிராம் ஹெரோயின் அடங்கிய 37 உருண்டைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here