ஈழத் தமிழர் மீது வாள்வெட்டு

தமிழகத்தில் கும்மிடிப்புண்டி அகதிகள் முகாமில் ஈழத் தமிழர் ஒருவரை அதே முகாமை சேர்ந்த நான்கு பேர் வாளால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் உதயகுமார் என்று அழைக்கப்படும 30 வயதுடைய சுதா என்பவரே பாதிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி முகாமில் பதிவு பெற்றுள்ள பால்ராஜ் என்பவர் கும்மிடிப்புண்டு முகாமில் வசித்து வந்துள்ளார்.வெட்டுக்காயங்களுக்கு இலக்காகிய சுதாவுக்கும் பால்ராஜீக்கும் இடையே முன் விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இரவு வேளையில் முகாமிற்குள் தனியாக நடந்து சென்ற சுதாவை பால்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் மூவர் வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது அவர்கள் வைத்திருந்த அறிவாளால் சுதா என்பவரை வெட்டியுள்ளனர்.

இதில் தலை, காது, கை மற்றும் கால் ஆகிய பகுதிகளில் பலத்த வெட்டுக்காயங்களுடன் சுதா சென்னையில் ஸ்ரான்லி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பில் வழக்கை பதிவு செய்த கும்மிடிப்புண்டி பொலிஸார் தப்பியோடிய நால்வரையும் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here