20வது திருத்தச் சட்டமூலத்தை நிராகரித்தது வடக்கு மாகாண சபை.

20ஆம் திருத்த சட்டத்தினை வடமாகாண சபை நிராகரித்துள்ளதுடன், திருத்தங்கள் கொண்டு வரப்பட்டால் அதனைப்பரிசீலனை செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 105வது விசேட அமர்வு இன்று வியாழக்கிழமை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில்ஆரம்பமாகியது.

இன்றைய அமர்வில் மத்திய அரசினால் கொண்டு வரப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டம் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், 20வது திருத்த சட்டத்தில் ஏதாவது திருத்தம் செய்வதானால் எமக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அதன் பின்னர் கருத்துக்களை தெரிவிக்கமுடியும். 20வது திருத்த சட்டமூலத்தில் குழப்பங்கள் இருப்பதனால் கருத்துக்களை கூறமுடியாது என்றார்.

வடமாகாண சபையின் கடந்த அமர்வில் 20வது திருத்தச் சட்ட மூலத்தினை ஆதரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று முடிவெடுக்கப்படுமென அவைத்தலைவர் அறிவித்திருந்தார்.

இன்று சபையில் 20வது திருத்தச் சட்டமூலம் விவாதத்திற்கு எடுக்கப்பட்ட போது, அதனை நிராகரிப்பதாகவும் அவ்வாறு திருத்தம் வந்தால், அது தொடர்பில் சபை பரிசீலிக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

அதனடிப்படையில், வடமாகாண சபை 20வது திருத்த சட்டமூலத்தினை நிராகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here