25 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருட்டு

நாவற்குளி – தச்சன்தோப்பு பகுதியில் கடந்த வாரம் வீட்டில் இருந்த ஆட்களை கத்தி முனையில் அச்சுறுத்திய திருடர்கள் ஒருதொகை தங்க நகைகள் மற்றும் பணத்தினைத் அபகரித்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 25 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளும் ஒரு லட்சம் ரூபா பணமுமே திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக பொலிஸார் இன்று நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

கடந்த வாரம் நாவற்குளி தச்சன்தோப்புப் பகுதியில் உள்ள வீடொன்றில் உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த முதியவரையும் உதவிக்குத் தங்கியிருந்த இரு பெண்களையும் கத்திமுனையில் அச்சுறுத்தியுள்ளனர்.

இதன்போதே 82 பவுண் தங்கநகைகளும் பணமும் திருடப்பட்டதாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இன்று நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here