9 கிலோ கஞ்சா சுழி­பு­ரத்­தில் வீடொன்­றுக்­குள் சிக்­கி­யது.

வட்­டுக்­கோட்டை, சுழி­பு­ரம் பகு­தி­யி­லுள்ள வீடொன்­றில் நேற்று 9 கிலோ கஞ்சா மீட்­கப்­பட்­டது. அதனை மறைத்து வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டில் அந்த வீட்­டி­லி­ருந்த ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

“சுழி­பு­ரம் பகு­தி­யி­லுள்ள வீடொன்­றில் கஞ்சா பொதி­கள் பதுக்கி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக இர­க­சி­யத் தக­வல் கிடைத்­தது. அந்­தப் பகு­தி­யில் வட்­டுக்­கோட்டை பொலி­ஸார் தேடு­தல் மேற்­கொண்­ட­னர்.

இதன்­போது வீடொன்­றுக்­குள் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த 9 கிலோ கிராம் கஞ்சா மீட்­கப்­பட்­டது. அதனை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டில் அந்த வீட்­டி­லி­ருந்த ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டார்” என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

இதே­வேளை, கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­னர் சங்­கா­னைப் பகு­தி­யில் மோட்­டார் சைக்­கி­ளில் கஞ்­சாவை கடத்த முயன்ற 2 பேர் சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ரால் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அதன் பின்­னர் சங்­கானை, வட்­டுக்­கோட்டை மற்­றும் அராலி ஆகிய பகு­தி­க­ளில் சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ரும் பொலி­ஸா­ரும் தீவிர சோதனை நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­த­னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here