கியூபாவை புரட்டிப் போட்ட சூறாவளி ‘இர்மா’, புளோரிடாவை நெருங்குகிறது

அட்லாண்டிக் கடலின் வரலாறு காணாத மிகப்பெரிய சூறாவளியான இர்மா, கியூபாவில் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தி, புளோரிடாவை நெருங்கி வருகிற்து.

4-ம் எண் சூறாவளியாக மாறியுள்ள இர்மா தீவுக்கூட்டமான புளோரிடா கீஸை நெருங்கி வருவதாக அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.

சுமார் 205-210 கிமீ வேகத்தில் காற்று அடித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில மணிநேரங்களில் இர்மாவின் மையம் கீழ் புளோரிடா கீஸ் கடற்கரைகளைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடலில் பேரலைகள் 4.6 மீட்டர்களுக்கு எழுச்சியுறும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் எந்த ஒரு சூறாவளிக்கும் இல்லாத அளவுக்கு புளோரிடா கீஸ் பகுதியிலிருந்து பெரிய அளவில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக அதன் பாதையில் பல தீவுகளைப் புரட்டி எடுத்த இர்மா, மூத்த வானிலை நிபுணர்களைக் கூட அச்சுறுத்தியுள்ளது.

கரீபியன் தீவுகளில் இர்மா சூறாவளிக்கு 24 பேர் பலியாகியுள்ளனர். இது புளோரிடாவில் பெரிய அளவில் உயிருக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மக்கள் தொகை நிரம்பிய 3-வது பெரிய மாகாணமான புளோரிடாவில் இர்மா ஏற்படுத்தும் செதம் பல பில்லியன் டாலர்களாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. மியாமி நகரம் கோஸ்ட் நகரமானது, சுமார் 4 லட்சம் மக்கள் தொகை கொண்ட இங்கு இர்மா பெரிய அளவில் மழை-வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தெருக்கள் வெறிச்சோடிக் காண்கின்றன.

மியாமி வேர்ல்ட் செண்டர் கட்டிடத்தின் கூரை மீது மிகப்பெரிய கிரேன் ஒன்றை தூக்கி கொண்டு வந்து போட்டுள்ளது இர்மா. அனைவரும் தங்கள் உடைமைகளை விட்டு விட்டு வெளியேறியுள்ளனர், அதிபர் ட்ரம்ப் கூட சொத்துக்கள் பாதுகாக்கப்படும் உயிரைக் காக்க வெளியேறி விடுங்கள் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

புளோரிடா மற்றும் தென்கிழக்கு ஜார்ஜியா பகுதியில் திங்களன்று 25 முதல் 51 செமீ பேய் மழை கொட்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஹார்வி புயல் கரையைக் கடந்த பிறகு உக்ரம் தணிந்தது, ஆனால் இர்மா உக்ரம் தணியாது என்று வானிலை ஆய்வு மையங்கள் தெரிவிக்கின்றன.

இர்மா சூறாவளி கியூபாவின் வட மத்திய கடற்கரையைக் கடந்து சென்ற போது பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது .பல இடங்கள் தண்ணீரில் மிதக்க மின்சாரக் கம்பங்கள் ஒரு மாதத்துக்கு சரி செய்ய முடியாதபடி சேதமடைந்துள்ளன, பல இடங்களில் தூக்கி வீசப்பட்டன, வீட்டுக் கூரைகள் பல தூக்கி வீசப்பட்டுள்ளன.

இந்தத் தாக்கத்திலிருந்து மீள சில ஆண்டுகள் பிடிக்கும் என்று நேரடி சாட்சியங்கள் கூறுகின்றன. 1932-க்க்குப் பிறகு 5-ம் எண் இர்மா சூறாவளி தனது மையக்கண்ணுடன் கியூபாவைக் கடந்துள்ளது. சுமார் 10 லட்சம் பேர்களை அப்புறப்படுத்த கியூபா அரசு உத்தரவிட்டது.

புளோரிடாவில் 6.3 மில்லியன் மக்கள் அப்புறப்படுத்தப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மாகாண மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்காகும் இது. கிட்டத்தட்ட புளோரிடாவில் 90 லட்சம் பேர் மின்சார வசதியை இழப்பார்கள் என்று தெரிகிறது .

இர்மாவினால் அமெரிக்காவில் காப்பீட்டு இழப்புகள் 15 பில்லியன் டாலர்களிலிருந்து 50 பில்லியன் டாலர்கள் வரை இருக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here