குடாநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்..

யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பகுதிகளிலும் மின் விநியோக மார்க்கங்களின் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக இன்றைய தினம் மின்சாரம் தடைப்படுமென்று இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மானிப்பாய், உடுவில் தெற்கு, ஆனைக்கோட்டை, மானிப்பாய் கார்கில்ஸ் பூட் சிற்றி, மானிப்பாய் வைத்தியசாலை, கல்வயல், மட்டுவில், சரசாலை, நுணாவில், பருத்தித்துறை வீதி, கொல்லங்கலட்டி, மாவை கலட்டி, ஊரெழு, சுதந்திரபுரம், குட்டியப்புலம், நவக்கிரி, நிலாவரை, சிறுப்பிட்டி மேற்கு, கலைமகள், ஆவரங்கால், வாதாரவத்தை, பெரிய பொக்கணை, புத்தூர்,ஊரணி, வீரவாணி, தோப்பு, அச்சுவேலி ஆஸ்பத்திரி, அச்சுவேலி நகர், பத்தமேனி, கதிரிப்பாய், இடைக்காடு, வளலாய் போன்ற பகுதிகளில் மின்தடைப்படவுள்ளது.

இதேவேளை, தம்பாலை, செல்வநாயகபுரம், பிறவுண் வீதி, அரசடி வீதி, புகையிரதக் கடவையிலிருந்து தட்டாதெருச் சந்தி வரை, கே.கே.எஸ். வீதி நாச்சிமார் கோவிலிருந்து சிவன் கோவில் வரை, நாவலர் வீதியில் ஐந்து சந்தியிலிருந்து இலுப்பையடிச் சந்தி வரை, கஸ்தூரியார் வீதியில் அரசடி வீதிச் சந்தியிலிருந்து ஸ்ரான்லி வீதிச்சந்தி வரை, மானிப்பாய் வீதியில் ஓட்டுமடம் சந்தியிலிருந்து கே.கே.எஸ். வீதி வரை, அஸாதி வீதி, ஏ.வி. தம்பி லேன், பிரபங்குளம் வீதி, பொன்னப்பா வீதி, சிவலிங்கப் புளியடி, கன்னாதிட்டி, மணிக்கூட்டு வீதி, சிவன் பண்ணை வீதி, காதி அபூபக்கர் வீதி, கம்பஸ் லேன், தொழில்நுட்பக்கல்லூரி, பல்கலைக்கழகக் கல்லூரி, ஹரிகரன் அச்சகம் பிறைவேற் லிமிற்றேட், அண்ணாமலையான் சிறி இராகவேந்திரா என்ர பிறைசஸ் பிறைவேற் லிமிற்றேட், வியாபார அபிவிருத்தி முகாமையாளர் பி.எல்.சி, அச்சுவேலி தொழிற்பேட்டை, அச்சுவேலி தொழிற்பேட்டை- 1, அச்சுவேலி தொழிற்பேட்டை-11 ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே குடாநாட்டு மக்கள் இந்த அறிவித்தலுக்கேற்ப மின்சாரம் குறித்து தமது முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here