கோர விபத்து : தாயும் மகனும் பலி

களுத்துறை, நாத்­து­பானை பகு­தியில் இடம்­பெற்ற விபத்தில் சிக்கி தாயும் மகனும் பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­துள்­ளது.

நேற்று பிற்­பகல் 02.10 மணி­ய­ளவில் வர­கா­கொ­டை­யி­லி­ருந்து ஹொரணை நோக்கி பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த மோட்டார் சைக்­கிளும் ஹொர­ணை­யி­லி­ருந்து வர­கா­கொடை நோக்கி பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த கெப் ரக வாக­னமும் ஹேன்­கொடை பாலத்­தில்­வைத்து நேருக்கு நேர் மோதி­ய­தி­லேயே குறித்த விபத்து ஏற்­பட்­டுள்­ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்­கிளில் வந்த தாயும் மகனும் தூக்­கி­யெ­றி­யப்­பட்டு களு­கங்­கையில் விழுந்­துள்­ளனர். இதன்­போது அங்­கி­ருந்­த­வர்கள் இவர்­களைக் காப்­பாற்ற முயற்­சி­களை மேற்­கொண்ட போதிலும் இரு­வ­ருமே உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

47 வய­தான கந்­த­ன­லாகே தொன் தமரா புஷ்­ப­காந்தி என்ற தாயாரும் 24 வய­தான பிர­மித ரங்­கிக ஹச­லங்க என்ற அவரது மகனும் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர். இவர்கள் மல்­பே­ரிய அக­­ல­வத்தை பகு­தியைச் சேர்ந்­த­வர்கள் என்றும் உயி­ரி­ழந்­த­வர்­களின் சட­லங்கள் இன்­றைய தினம் பிரேதப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­மெ­னவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது சந்தேநபரான கெப் வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here