செல்வபுரம் கிராமத்தில் மகனின் தாக்குதலில் தந்தையை காயம்

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள செல்வபுரம் கிராமத்தில் மகனின் தாக்குதலில் தந்தை காயம் அடைந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது, ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் உள்ள இந்துபுரம் கிராம சேவையாளர் பிரிவின் செல்வபுரம் கிராமத்தில் ஒரே வீட்டில் வசிக்கும் தந்தை மீது மகன் மோசமான முறையில் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த தந்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
70 வயது நிரம்பிய குறித்த முதியவரை அவரது மகன் மது போதையில் கடுமையாக தாக்கியுள்ளார். குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் குறித்த முதியவர் கிளிநொச்சி  வைத்தியசாலையில் அயலவர்களின் உதவியுடன் அழைத்து செல்லப்பட்டு வைத்திய உதவிகள் இடம்பெற்ற வருகின்றன. சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசாரிற்கு தகவல்  வழங்கிய போதிலும் இதுவரை எவ்வித விசாரணைகளும் ஆரம்பிக்கப்படவில்லை. மாங்குளம் பொலிசாரின்  அசமந்த போக்கினால்குறித்த பகுதி மக்கள் நீண்டகாலமாக  பல்வேறு சிரமங்களிற்கு உள்ளாகி வருகின்றனர். சம்பவம் தொடர்பிலான விசாரணைகளிற்கான வைத்தியசாலை பொலிசார் மாங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளமை குறிப்பிடதக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here