பேனா மூலம் பரீட்சை எழுதத் தடை

இலண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் பேனா மூலம் பரீட்சை எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 800 ஆண்டுகள் பழைமை கொண்டது.

இங்கு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் கல்வி பயில்கின்றனர்.

இப் பல்கலைக்கழத்தில் பரீட்சைகள் வினாத்தாள்களில் பேனா மூலம் கைகளினால் எழுதப்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்சமயம் அதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

மாணவர்களது கையெழுத்து சரிவர புரியாத நிலையில் இருப்பதாலும் பாடத்திட்டங்கள் யாவும் கணினி மூலம் பதிவு செய்து கற்பிக்கப்படுவதாலும் இம்முறைமை தடைசெய்யப்பட்டுள்ளது.

மாணவர்களது கையெழுத்து சரிவர புரியாத நிலையில் தேர்வுகளில் விடைத்தாள்களைத் திருத்தும் பேராசிரியர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.

இந் நிலைமை மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகவே, பேனா மூலம் பரீட்சை எழுதத் தடை விதிக்கப்பட்டு கணினியில் தட்டச்சு( (Type) மூலமாக பரீட்சைகள் யாவும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

எனினும், இலண்டனிலுள்ள எடின்பேர்க் (Edinburgh) பல்கலைக்கழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்தே இத்தகைய முறைமை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here