விக்­கிக்கு டக்­ளஸ் பாராட்டு

வடக்கு மாகாண எதிர்­கட்­சித் தலை­வர் சி.தவ­ரா­சாவை விமர்­சித்து மாகாண சபை­யில் உரையாற்றியமைக்காக நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் ஈ.பி.டி.பியின் செய­லா­ள­ரு­மான டக்­ளஸ் தேவா­னந்தா அலை­பே­சி­யில் தொடர்பு கொண்டு பாராட்­டுத் தெரி­வித்­தார்.

இதனை வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் உறுதிப்ப டுத்தினார். வடக்கு மாகாண சபை­யின் வினைத்­தி­றன் தொடர்­பில் எதிர்க் கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா, ஜூலை மாதம் 21ஆம் திகதி உரை­யாற்­றி­யி­ருந்­தார்.

மாகாண சபை மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­க­ளைச் சுமத்­தி­யி­ருந்­தார். இதற்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி பதி­ல­ளித்­தி­ருந்­தார். அதில் அவர் எதிர்­கட்­சித் தலை­வர் சி.தவ­ரா­சாவை மிகக் கடு­மை­யா­கச் சாடி­யி­ருந்­தார்.

இது தொடர்­பி­லேயே நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவா­னந்தா, அலை­பேசி ஊடாக முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னைத் தொடர்பு கொண்டு தனது பாராட்­டைத் தெரி­வித்­துள்­ளார். விரை­வில் நேரில் பேசு­வ­தா­க­வும் இதன்­போது டக்­ளஸ் தேவா­னந்தா குறிப்­பிட்­டுள்­ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here