49 வயதான கொழும்புப் பெண்ணிற்கு நடந்த விபரீதம்

பஸ்ஸில் சந்தித்த 31 வயதான நபருடன் தங்கும் விடுதிக்கு சென்ற 49 வயதான பெண் எண்ணிப்பார்க்காத பிரச்சினை ஒன்றை எதிர்நோக்கியுள்ளார்.

கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிந்து வரும் இந்த பெண் அனுராதபுரத்தில் உள்ள தனது வீட்டுக்கு செல்ல பஸ் ஏறியுள்ளார்.

அருகில் அமர்ந்திருந்த இளைஞர், பெண்ணுடன் பேசியுள்ளதுடன் இருவரும் பல தகவல்களை பரிமாறிக்கொண்டுள்ளனர்.

அப்போது, தான் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் நிறுவனத்தில் பணிப்புரிவதாகவும் தேவையானால், மாதம் ஒரு லட்சம் சம்பளத்தில் தொழில் பெற்று தர முடியும் என இளைஞன் பெண்ணிடம் கூறியுள்ளார்.

இதன் பின்னர் இருவரும் தொலைபேசி இலக்கங்களை பரிமாறிக்கொண்டுள்ளனர். ஒருநாள் இளைஞன் பெண்ணை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு வெளிநாட்டு வேலை பற்றி பேசுவதற்கு வருமாறு அழைத்துள்ளார்.

பெண்ணை பொல்காவல நகருக்கு வரவழைத்த இளைஞன், தங்கும் விடுதி ஒன்றுக்கு சென்று சுதந்திரமாக பேசலாம் என யோசனை முன்வைத்துள்ளார்.

இதனையடுத்து நகரில் உள்ள தங்கும் விடுதிக்கு இருவரும் சென்றுள்ளனர். இளைஞன் அறையில் இருக்கும் போது பெண் தன்னை தூய்மைப்படுத்திக்கொள்ள குளியலறைக்கு சென்றுள்ளார்.

பெண் குளியலறையில் இருந்து வெளியில் வந்ததும், அவசரமாக ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்க வேண்டும் எனக் கூறி இளைஞன் விடுதியில் இருந்து சென்றுள்ளார். பல மணி நேரம் கழிந்தும் இளைஞன் திரும்பி வரவில்லை.

இளைஞன் திரும்பி வராததால், சந்தேகமடைந்த பெண், தனது கைப்பையை திறந்து பார்த்துள்ளார். அதில் இருந்து 51 ஆயிரம் ரூபா காணாமல் போயிருந்தது.

இதனையடுத்து தனது விரலில் அணிந்திருந்த மோதிரத்தை விடுதியில் கொடுத்து விட்டு, பொலிஸ் நிலையத்திற்கு சென்று சம்பவம் குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸார் கூறியபடி வேறு ஒரு சிம் அட்டை ஊடாக இன்னுமொரு பெண் பேசுவது போல், இளைஞனுடன் பேசி பொல்காவல நகருக்கு வரழைத்துள்ளார். அப்போது இளைஞனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 31 வயதான நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here