இன்று முதல் கன மழை

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் 29 ஆயிரத்து 196 குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 4638 (104638) பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை நாடு முழுவதும் மழை கூடிய காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்காவில் நீடித்து வரும் சீரற்ற காலநிலையால் கேகாலை மாவட்டத்தில் 1519 குடும்பங்களைச் சேர்ந்த 4537 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 692 குடும்பங்களைச் சேர்ந்த 2091 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, தொடர் மழை காரணமாக நிகழும் மண் சரிவு காரணமாக மலையகத்திலும் தொடர்ந்தும் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றார்கள்.

இந்த நிலையில், நாட்டில் பெருமளவிலான பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யும் என வளி மண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் ஐ.பி.சீ.தமிழ் செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில், காலி, மாத்தறை, இரத்தினபுரி, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும்.

அத்துடன், கொழும்பு தொடக்கம் காலி ஊடாக வரையிலான மாத்தறை , திருகோணமலை தொடக்கம் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடற் பிராந்தியங்களில் அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யும்.

ஸ்ரீலங்காவை சூழவுள்ள பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், இதன் போது கடல் சற்று கொந்தளிப்பாக காணப்படும் எனவும் குறிப்பிட்டார்.

கடற் பிராந்தியங்களில் காற்று 30 கிலோ மீற்றர் முதல் 40 கிலோ மீற்றர் வரை தென் மேற்கு திசையில் இருந்து வீசும் என தெரிவித்த சாலிஹின்

இவ்வாறான நிலையில் பொது மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ள அவதானமாக செயற்படுமாறும் அவர் கேட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here