சைட்டத்திற்கெதிரான மக்கள் அணி தொடர்பில் தெளிவூட்டும் ஊடக சந்தி்ப்பு

சைட்டத்திற்கெதிரான மக்கள் அணி தொடர்பில் தெளிவூட்டும் ஊடக சந்தி்பு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கிளிநொச்சி தொழில்நுட்ப கல்லூரி மண்டபத்தில் குறிதத் ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த ஊடக சந்திப்பில் வைத்தியர்கள், வைத்தியபீட மாணவர்கள் கலந்துகொண்டு நாளைமுதல் முன்னெடுக்கப்படவுள்ள சைட்டத்திற்கு எதிரான மக்கள் அணி போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்தனர்.
நாளை கொழும்பு நோக்கி குறித்த மக்கள் அணி போராட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது, பகல் கிளிநொச்சி பரந்தனை வந்தடையும் குறித்த போராட்டம் முறிகண்டியுடன் நிறுத்தப்படும் எனவும், மறுநாள் முறிகண்டியிலிருந்து வவுனியா நோக்கிய பயணம் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதே வேளை எதிர்வரும் 21ம் திகதி நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்களை உள்ளடக்கி, ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், வைத்தியர்கள் என பணி பகிஸ்கரிப்பு போராட்டம் ஒன்றிற்கும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here