டெங்கு நோய் பரவும் அபாயம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மீண்டும் டெங்கு நோய் பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தேசிய டெங்கு நோய் தடுப்புப் பிரிவின் சமூக விசேட வைத்தியர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசேடமாக சுகாதாரப் பிரிவு மற்றும் பொதுமக்கள் நிறைவேற்றிய பணிகளுடன் மழை குறைந்தமையே டெங்கு நோய் குறைந்தமைக்கும் காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மீண்டும் டெங்கு நோய் வியாபிக்கக்கூடிய நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்றும் வைத்தியர் பிரசீலா சமரவீர கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here