நியமனம் வழங்குவதாக உறுதி வழங்கவில்லை.

ஒரு மாதத்தில் தீர்வை பெற்றுத்தருவேன் என சுகாதார தொண்டர்களுக்கு தான் உறுதிமொழி வழங்கவில்லை என வட மாகாணசுகாதார அமைச்சர் குணசீலன் தெரிவித்தார்.

வவுனியா ஒருங்கணைப்புகுழு கூட்டத்தில் சுகாதார தொண்டர்களின் போராட்டத்திற்கான தீர்வு தொடர்பாக அமைச்சர் ரிஷாட் பதியூதின் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சுகாதார தொண்டர்கள் 180 நாட்களுக்கு மேலாக நிரந்தர நியமனத்திற்காக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நான் முயற்சித்துள்ளேன். எனினும் சில ஊடகங்களில் வந்தது போல் ஒரு மாதத்தில் தீர்வை பெற்றுத்தருவேன் என கூறவில்லை.

இதற்கான தீர்வை மத்திய அரசாங்கமே தரவேண்டும். பல சுகாதார தொண்டர்கள் இவ்வாறு தொழில்வாய்ப்பு கேட்டுள்ளார்கள் இவர்கள் பல துறைகளை சேர்ந்தவர்கள்.

எனவே இவர்களுக்கான நியமனத்தினை வழங்க வேண்டும் என மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அதற்கான நடைமுறைகள் இடம்பெறுகின்றது.

எதிர்வரும் சில நாட்களில் நிதி அமைச்சரை சந்திக்கவுள்ளேன். இதன்போதும் சுகாதார தொண்டர்களின் நியமனம் தொடர்பாக கலந்துரையாடுவேன் என வட மாகாணசுகாதார அமைச்சர் குணசீலன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here