பலாலியில் மாய­மான சிப்­பா­யின் துப்­பாக்கி மீட்பு!

பலாலி படைத் தலை­மை­கத்­தில் காவல் கட­மை­யில் இருந்த இரா­ணு­வச் சிப்­பாய் காணா­மற் போ­யுள்ள நிலை­யில் துப்­பாக்கி மற்­றும் மக­சீன் என்­பன மீட்­கப்­பட்­டுள்­ளன என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அங்­குள்ள காவ­ல­ர­ணில் கட­மை­யில் இருந்த இரா­ணு­வச் சிப்­பாய் நேற்­று­முன்­தி­னம் அதி­காலை முதல் காணா­மல் போயி­ருந்­தார். மாற்­றுக் கட­மைக்கு மற்­றொரு சிப்­பாய் சென்­ற­போதே இந்த விட­யம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

இரா­ணு­வச் சிப்­பா­யு­டன் துப்­பாக்­கி­ யும் காணா­மல் போயி­ருந்­தது என்று கூறப்­பட்ட நிலை­யில் தற்­போது துப்­பாக்கி மீட்­கப்­பட்­டுள்­ளது.

காணா­மல் போயுள்ள சிப்­பாய் பற்­றிய விவ­ரங்­களை இரா­ணு­வத்­தி­னர் வெளி­யி­ட­வில்லை. சிப்­பா­யைத் தேடும் பணி­கள் நடை­பெ­று­கின்­றன என்று கூறப்­ப­டு­ கின்­றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here