பொன்­சே­கா­வுக்கு எதி­ராக ஜெனி­வா­வில் களம் இறங்கும் சரத் வீர­சே­கர

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் 36ஆவது கூட்­டத்­தொ­ட­ரில் முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி பீல்ட் மார்­சல் சரத் பொன்­சே­கா­வுக்கு எதி­ராக பரப்­பு­ரைப் போரை முன்­னெ­டுப்­ப­தற்­காக முன்­னாள் படை அதி­காரி ரியர் அட்­மி­ரல் சரத் வீர­சே­க­ரவை மகிந்த அணி ஜெனி­வா­வில் கள­மி­றக்­க­வுள்­ளது.

சிறப்பு அறிக்­கை­யு­டன் நாளை மறு­தி­னம் புதன்­கி­ழமை ஜெனி­வா­வுக்­குப் புறப்­ப­டு­கின்­றார் சரத் வீர­சே­கர.  ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ரின் அறிக்கை தொடர்­பி­லும் கேள்வி எழுப்­பப்­ப­டும் என­வும் தெரி­வித்­தார்.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் 36ஆவது கூட்­டத்­தொ­டர் ஜெனிவா நக­ரி­லுள்ள ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இன்று ஆரம்­ப­மாகி எதிர்­வ­ரும் 29ஆம் திக­தி­வரைநடை­பெ­ற­வுள்­ளது.

இந்­தக் கூட்­டத்­தொ­ட­ருக்கு சமாந்­த­ர­மாக அர­ச­சார்­பற்ற அமைப்­பு­க­ளின் உப­கு­ழுக் கூட்­டங்­க­ளும் இடம்­பெ­றும். இதன்­போது முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி பீல்ட் மார்­சல் சரத் பொன்­சே­கா­வின் அறி­விப்பை முக்­கிய துருப்­புச் சீட்­டா­கப் பயன்­ப­டுத்தி இலங்கை மீது அழுத்­தம் கொடுப்­ப­தற்­கும் – படை­யி­ன­ருக்கு எதி­ரான விசா­ர­ணையை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­கும் பன்­னாட்டு அமைப்­பு­கள் தீவிர நட­வ­டிக்­கை­யில் இறங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரிய போர்க்­குற்­றத்­தில் ஈடு­பட்­டார் என்­றும், அதற்­கு­ரிய ஆதா­ரங்­கள் தன்­னி­டம் இருக்­கின்­றன என்­றும் இறு­திக்­கட்­டப் போரை வழி­ந­டத்­திய இரா­ணு­வத் தள­ப­தி­யான பீட்ல் மார்­சல் சரத் பொன்­சேகா வெளி­யிட்ட கருத்து இலங்கை அர­சி­யல் களத்­தில் மட்­டு­மல்­லாது – பன்­னாட்­டுச் சமூ­கத்­தி­லும் சர்ச்­சை­யைக் கிளப்­பி­யுள்­ள­து­டன் இலங்­கைக்­கும் இரா­ஜ­தந்­திர மட்­டத்­தில் கடும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இவ்­வா­றா­ன­தொரு பின்­பு­லத்­தி­லேயே படை­யி­ன­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்டை மறுத்­து­ரைப்­ப­தற்­காக முன்­னாள் படை அதி­கா­ரி­யான சரத் வீர­சே­க­ரவை மகிந்த அணி ஜெனிவா அனுப்­பு­கின்­றது.

தனது பய­ணத்­தின் நோக்­கம் பற்றி கருத்து வெளி­யிட்ட சரத் வீர­சே­கர, “இன்­னும் மூன்று நாள்­க­ளில் அங்கு சென்று விடு­வேன். ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ரின் இலங்கை குறித்த அறிக்­கை­கக்கு எதி­ராக கடந்த அமர்­வின்­போது முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.

இதற்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்கை குறித்து கேள்வி எழுப்­பப்­ப­டும். புலம்­பெ­யர் அமைப்­பு­க­ளி­டம் பணம் வாங்­கிக்­கொண்டு படை­யி­ன­ருக்கு எதி­ரா­கச் செயற்­ப­டும் சரத் பொன்­சேகா பற்­றி­யும் புலம்­பெ­யர் சிங்­கள மக்­க­ளுக்­கும் – அமைப்­பு­க­ளுக்­கும் – அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளுக்­கும் எடுத்­து­ரைக்­கப்­ப­டும்.

பொன்­சே­கா­வின் அறி­விப்­பையே மனித உரி­மை­கள் அமைப்­பு­கள் இம்­முறை கையி­லெ­டுக்­கும். எனவே, அவற்­றுக்கு உரிய பதி­லடி கொடுக்­கப்­ப­டும்” என்­றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here