மாஞ்சோலைவில் கோர விபத்து.

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற விபத்தில், நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிவேகமாக பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்தவர்கள், மாஞ்சோலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வைத்தியசாலை உள்ளிட்ட பொது இடங்களுக்கு அருகாமையில் வேகக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ள போதும், வீதி ஒழுக்க விதிகளை கடைப்பிடிக்காத காரணத்தால் இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படுவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here