மூன்று வயது குழந்தை மரணம்

அம்பன்பொல – தெமடவெவ பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து சிறு குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்ட பிரதேச மக்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும், அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் அம்பன்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here