வவுனியாவில் விபத்து இருபிள்ளைகளின் தாய் பலி, மகள் படுகாயம்

வவுனியா மதியாமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பிள்ளைகளின் தாயொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

வவுனியா வடக்கு நெடுங்கேணி மதியாமடு பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் தனது கணவனை பார்ப்பதற்காக தோட்டத்திற்கு தனது மகளுடன் பயணித்த இளம் தாயொருவர் மீது திடீரென வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இரு பிள்ளைகளின் தாயாரான 26 வயதுடைய சுமன் வனஜா என்ற இளம் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவருடன் பயணித்த அவரது ஆறு வயதுடைய மகள்  படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவர்களை மோதிய மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை பொலிஸார் கைது செய்ததில் அவர் 16 வயதுடைய மாணவன் என்பதுடன் சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாதவர் என்பதும் பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப் படுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here